
posted 4th July 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து ஒரு படகில் வந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் ஞாயிற்றுக்கிமை (03.07.2022) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை யாழ் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து ஐஎன்டீ - பிவை - பிகே - எம்எம் 898 இலக்கமுடைய ஒரு இந்திய படகில் வந்த 12 இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்படையினரால் கூட்டிச் சென்று இவர்களை திங்கள்கிழமை (04.07.2022) பருத்தித்துறை நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)