முதுமாணிப் பட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்டப் பொதுச் செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு நிறு வனத்தினூடாக மனித உரிமையில் முதுமாணிப் பட்டத்தினை நிறைவு செய்திருந்தார். இம்முதுமாணிப் பட்டத்தினை நேற்று (29) கொழும்பு பண்டாறுநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்துப் பெற்றுக் கொண்டார்.

அத்தோடு இவர் உருகுனே பல்கலைக்கழகத்தில் சமாதானமும், அபிவிருத்தியும் தொடர்பான முதுமாணிப் பட்டத்தினையும், யுனிசெப் நிறுவனத்தின் புலமைப்பரிசில் ஊடாக குழந்தை பாதுகாப்புத் தொடர்பான பட்டப்பின்படிப்பினை ரஜரட்டை பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்துள்ளார்.
இவற்றோடு பண்டாறுநாயக்கா சர்வதேச கற்கை நிறுவனத்தினூடாக சர்வதேச கற்கைநெறி தொடர்பான பட்டப்பின் படிப்பினையும், மனித உரிமையில் பட்டப்பின் படிப்பினையும், அமெரிக்கா இல்னஸ் பல்கலைக்கழகத்தினூடாக புலமைப்பரிசில் பெற்று, இலங்கை நிர்வாக நிறுவனத்தில் ஒரு வருடகாலம் நல்லாட்சிக்கும், தலைமைத்துவத்துக்குமான கற்கை நெறியில் டிப்ளோமாச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.

இவர் ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலைகளின் பழைய மாணவரும், சிவானந்தா தேசிய பாடசாலை விஞ்ஞானப் பட்டதாரியுமாவார்.
பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் முன்னாள் கல்விப் பொறுப்பாளரான இவர், காலஞ்சென்ற பொன்னுத்துரை- மனோரஞ்சிதம் தம்பதிகளின் புதல்வருமாவார்.

முதுமாணிப் பட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY