
posted 11th July 2022
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி, மாவிலங்கத்துறையில் நேற்று ஞாயிற்று (10) கிழமை காலை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் வயல் காணியில் கைக்குண்டு கிடைப்பதைக் கண்டுள்ளார்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார், கைக்குண்டை மீட்டனர்.
இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)