
posted 2nd July 2022
மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகள் ஸ்தலமான மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழா சனிக்கிழமை (02.07.2022) இன்று, 02.07.2022, விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
மக்கள் கொரொனாவின் பரவலால் கடந்த இரு வருடங்களாக்க வீட்டினுள்ளே முடங்கிக்கிடந்து மீண்டெழுந்து, இந்த வருடம் அன்னையின் அருளால் அருகிக்கொண்டிருக்கும் இந்த கொடியநோயின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றியமைக்காகவும், இந்தப் பெருநாளில் பங்கு கொள்ள வைத்தமைக்காகவும் பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி நன்றி கூறும் பெருநாளாகும்.
இப்பெருநாளைக் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு பேனாட் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் இணைந்து பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுப்பதையும், பக்தர்களின் ஒரு பகுதினரையும் மருதமடு அன்னையின் திருச் சுரூப பவனியையும் படங்களில் காணலாம்.
பின்னைய செய்தி
மன்னார் மறைமாவட்டத்தில் ஆடி மாத பெருவிழாவாக கொண்டாடப்படும் மருதமடு ஆலய விழாவில் இவ் வருடம் வழமையாக கலந்து கொள்ளும் பக்தர்களின் தொகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தென் இலங்கையிலிருந்து ஆயர்கள் உட்பட மதக்குருக்கள் பக்தர்கள் கலந்து கொள்ளாத நிலையும் காணப்பட்டது.
மன்னார் மறைமாவட்டத்தில் வழமையாக கொண்டாடப்படும் ஆடிமாத மருதமடு மாதாவின் விழாவில் உள் மாவட்ட மக்கள் உட்பட தென் இலங்கையிலிருந்தும் ஆயர்கள் அருட்பணியாளர்கள் பக்தர்கள் கூட்டம் பெருந் தொகையாக வந்து கலந்து கொள்வது வழமையாகும்.
ஆனால் கடந்த ஓரிரு வருடங்கள் கொவிட் தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அருட்பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது அதுவும் அந்நேரம் தென் இலங்கையிலிருந்து எவரும் கடந்த இவ் விழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையும் இருந்தது.
ஆனால் இவ் வருடம் (2022) சனிக்கிழமை (02.07.2022) நடைபெற்ற இவ் ஆடி மாத பெருவிழாவில் எவ்வித கட்டுப்பாடும் அற்ற நிலையில் வழமைபோன்று பக்தர்கள் கலந்து கொள்ள சகல ஓழுங்குகளும் மேற்கொள்ளப்படடிருந்தது.
அவ்வாறு இருந்தும் இவ் வருடம் இவ்விழாவுக்கு மிக குறைந்த பக்தர்களே வருகை தந்திருந்தனர். தென் பகுதியிலிருந்து ஆயர்கள் அருட்பணியாளர்கள் உட்பட பக்தர்கள் வருகை தராத நிலையே காணப்பட்டது.
மடு ஆலயத்துக்கு வந்திருந்த வாகனங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே காணப்பட்டது.
நாட்டில் சகல இடங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருப்பதாலேயும் போக்குவரத்து மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாகவும் வெளியூர் உள்ளுர்களிலிருந்தும் மக்கள் வர முடியவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை (02) நடைபெற்ற இப் பெருவிழாவில் மன்னார் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர்களான மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகிய இருவருமே தமிழ் சிங்களம் மற்றும் திருச்சபையின் தாய் மொழியாம் லத்தின் மொழியிலும் பெருவிழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வழமைபோன்று மருதமடு திருச்சுரூப பவனியும் இதைத் தொடர்ந்து யாழ் ஆயரால் திருச்சுரப அசீரும் வழங்கப்பட்டதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மடுத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வருடத்தில் இருமுறை வழங்கப்படும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY