மன்னார் நகரம் பிரதேச செயலகப் பிரிவில் 22.07.2022 அன்று பெற்றோல் விநியோகம்.

மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் 22.07.2022 அன்று வெள்ளிக்கிழமை கீழ்வரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெற்றோல் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் பெற்றோல் வழங்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களும், கிராம அலவலகர் பிரிவுகளும், வழங்கப்படும் நேரங்களும் பின்வருமாறு:

மன்னார் நகரத்திலுள்ள லங்கா எரிபொருள் நிரப்பு நிலையத்தில்

  • தாராபுரம் கிழக்கு காலை 08.00 லிருந்து 09.00 மணி வரை
  • தாராபுரம் மேற்கு காலை 09.00 லிருந்து 10.00: மணி வரை
  • எருக்கலம்பிட்டி மேற்கு , எருக்கலம்பிட்டி வடக்கு , எருக்கலம்பிட்டி கிழக்கு காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை
  • பட்டித்தோட்டம் பிற்பகல் 12.15 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை
  • தாழ்வுபாடு பிற்பகல் 2.30 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை

மன்னார் ஐஓசி எரிபொருள் நிலையத்தில்

  • எருக்கலம்பிட்டி தெற்கு காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை
  • எருக்கலம்பிட்டி மத்தி காலை 9.30 மணியிலிருந்து காலை 10.30 மணி வரை
  • தோட்டவெளி காலை 10.30 யிலிருந்து 12.30 மணி வரையும் பின் மாலை 4.30 மணியிலிருந்து பிற்பகல் 6 மணி வரை

தாராபுரம் லங்கா எரிபொருள் நிரப்பு நிலையத்தில்

  • புதுக்குடியிருப்பு காலை 8 மணியிலிருந்து 9.30 மணி வரை
  • பெரிய கரிசல் காலை 9.30 யிலிருந்து காலை 10.30 மணி வரை
  • சிறுத்தோப்பு காலை 10.30 யிலிருந்து காலை 11.30 மணி வரை
  • ஓலைத்தொடுவாய் காலை 11.30 மணியிலிருந்து நண்பகல் 12.30 மணி வரை

பேசாலை தெற்கு

  • நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 2.40 மணி வரை பெற்றோல் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரம் பிரதேச செயலகப் பிரிவில் 22.07.2022 அன்று பெற்றோல் விநியோகம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)