பொலிஸார் மோட்டார் சைக்கிள்களிற்கு முழு டாங் நிரப்ப முயற்சி

கிளிநொச்சி முழங்காவில் எரிபொருள் நிரப்பு நிலையதில் பொலிஸார் தமது மோட்டார் சைக்கிள்களிற்கு முழு டாங் நிரப்ப முயற்சி

எஸ் தில்லைநாதன்கிளிநொச்சி முழங்காவில் எரிபொருள் நிரப்பு நிலையதில் பொலிஸ்ஸார் தமது மோட்டார் சைக்கிள்களிற்கு முழு டாங் நிரப்ப முயற்சித்துள்ளனர்.

குறித்த முயற்சிக்கு கடமையில் இருந்த கண்காணிப்பு உத்தியோகத்தர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவம் மறுத்துள்ளது.

இந்த நிலையில், பொலிஸ் அதிகாரியின் கோரிக்கை கடிதத்துடன் சென்று எரிபொருள் நிரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த கடிதத்தில் முழுமையாக்கும் வகையில் அதிகாரி கையளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் விசனம் எழுந்துள்ளதுடன், பொலிசாரின் செயற்பாடு தொடர்பில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

குறித்த கடிதம் தொடர்பில் கவனத்தில் கொண்ட கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவத்தினர், முழுமையாக வழங்குவதை தவிர்த்து, மட்டுப்படுத்தி எரிபொருள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் மோட்டார் சைக்கிள்களிற்கு முழு டாங் நிரப்ப முயற்சி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY