
posted 29th July 2022
வடமராட்சி புலோலி மேற்கு முருகன் கோவிலடி அறிவகம் சனசமூக நிலையத்தின் 67 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டுப் போட்டிகளும் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அறிவகம் சனசமூக நிலையத்தின் தலைவர் மனுஷன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக குறித்த விழாவிற்கு சமூகமளித்திருந்த சிறப்பு கவுரவ விருந்தினர்கள் வீதியில் முருகன் ஆலய வீதி முன் பகுதியில் இருந்து மைதானம் வரை மாலை மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.
தொடர்ந்து அறிவகம் சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சிறப்பு பிரதம சிறப்புகளை விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதனைத் தொடர்ந்து இதில் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், முன்னாள் ஓய்வுபெற்ற கிராம சேவகர் தயாசிரி மற்றும் கௌரவ விருந்தினர்கள் கிராம அலுவலர் வடமேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஸ்ரீசங்கரர், சில சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை பிரதேச சபை யோகராசா, திருமதி யோகராஜா, ஜார்ஜ் ஹாட்லி கல்லூரி அதிபரும் நிலைய உறுப்பினருமாகிய முகுந்தன் உட்பட்ட அதிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்விற்கு குறித்த கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY