பாடசாலைகள் ஆரம்பமாகின

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை (25) ஆரம்பமாகின.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அசாதாரணநிலை காரணமாக நாடு பூராகவும் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

அத்துடன் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்தோ அல்லது இணையவழி கற்றல் செயல்பாடுகள் மூலமாகவோ கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சால் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவித்தலின் பிரகாரம் நேற்று பாடசாலைகள் ஆரம்பமாகின. முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் பாடசாலைகள் வழமைபோன்று ஆரம்பமாகின. எனினும் வவுனியா மாவட்டத்தில் இ. போ. ச. பஸ் சேவை இடம்பெறாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். இதனால், மாணவர்கள், ஆசிரியர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.

பாடசாலைகள் ஆரம்பமாகின

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)