பலவகைச் செய்தித் துணுக்குகள்

யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயித்தியமலையில் வசித்துவரும் கோயில்போரதீவைச் சேர்ந்த மு. விசயராசா (வயது-54) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உன்னிச்சை மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆயித்தியமலையில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும்போது நெடியமடு வைத்தியசாலைக்கு முன்னால் பிரதான வீதியில் நின்ற காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலே குறித்த நபர் பலியானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

இந்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சட்டவிரோத மண்ணகழ்வு, நபர் தப்பி ஓட்டம்

சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட பட்டா ரக வாகனம் ஒன்று விஷேட அதிரடிப்படையினரினால் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வல்லிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த பட்டா ரக வாகனத்தை விஷேட அதிரடிப் படையினர் துரத்திச் சென்றபோதும் மண் கடத்தல் காரர்கள் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட வாகனம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY