
posted 6th July 2022
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று புதன்கிழமை (06) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலயப் பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் திகதி பூர்வாங்க கிரிகைகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனையடுத்து சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன், யாகப் பூசைகளும் நடைபெற்றன.
இன்று புதன்கிழமை (06) காலை 9 மணி அளவில் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)