
posted 12th July 2022
வீட்டில் இருந்த நபர் ஞாயிற்றுக்கிழமை (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை ஹமீட் சேர்மன் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வயர் ஒன்றினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் நேற்று முன் தினம் வெளியூர் ஒன்றுக்கு பயணம் சென்ற நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)