
posted 25th July 2022
நாடு பூராகவும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்ற அபாய நிலை காணப்படுவதால், 25 ஆம் திகதி தேசிய டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 43 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளது. இதில் இம்மாதத்தின் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் சுமார் 8000 பேர் வரையில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுளள்னர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமான ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பொது இடங்கள் டெங்கு நுளம்பு பெருகும் அபாயமுள்ள பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்தப் பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி டெங்கு நுளம்புகள் பெருகா வண்ணம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், மற்றும் களப்பரிசோதனைகள், சிரமதானம் போன்ற நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY