
posted 10th July 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்குச் செல்லக் கோரி மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவரினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு பிள்ளையாரடியிலிருந்து இருந்து நடைபவனியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
கைகளில் நெருப்பு பந்தங்களை ஏந்தியவாறு பேரணியாக வந்தவர்கள் பொலிஸ் சுற்றுவட்டத்தில் தமது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் கோசங்களை எழுப்பினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)