கடவை இருந்தும் கடமையில் இல்லாததால் குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டு மரணம்

ரயில்வே கடவையில் பாதுகாப்புக்கான தடை மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையினால் ஒரு குடும்பஸ்தர் அநியாயமாக ரயிலில் மோதி மரணிக்க வேண்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் மன்னாரில் இசைமாலை தாழ்வு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03.07.2022) காலை 7. 05 மணி அளவில் இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;

ஞாயிற்றுக்கிழமை (03.07.2022) காலை தலைமன்னாரில் இருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட ரயில் இசைமாலை தாழ்வு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ரயில்வே கடவையை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு குடும்பஸ்தர் தாண்டி செல்லும் பொழுது அவர் ரயிலில் மோதுண்டு இழுத்து செல்லப்பட்ட நிலையில் மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் ரயில்வே கடவை போடப்பட்டிருந்த போதும் கடவையில் அந்நேரத்தில் எவரும் கடமையில் இல்லாமையினாலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுளது.

ரயிலில் மோதிய நபர் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் ஸ்தலத்திலேயே மரணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் சடலத்தை உடன் ரயிலில் ஏற்றிக்கொண்டு மடு புகையிரத நிலைய அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்தில் இறந்தவர் தனது கணவர் கணபதி கனகராஜ் (வயது 27) என இறந்தவரின் மனைவியும், சகோதரரும் அடையாளம் காட்டினர்.

இதைத்தொடர்ந்து மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ. குணகுமார் முன்னிலையில் இறந்தவரின் மனைவியும், சகோதரரும் கொடுத்த வாக்குமூலத்தின் பிரகாரம் தெரிய வருவதாவது;

இறந்தவர் தனது கணவர் எனவும், தாங்கள் மாளிகைப்பிட்டியைச் சார்ந்தவர்கள் எனவும், எனது கணவர் இசைமாலை தாழ்வு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும், இன்று ஞாயிற்றுக்கிழமை (03.07.2022) காலை தொழிலுக்காக மாளிகைபிட்டியிலிருந்து இசைமாலை தாழ்வு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்தாக தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் இவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

இறந்தவரின் சடலம் தற்பொழுது மன்னார் பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இம் மரணம் தொடர்பாக முருங்கன் போலீசார் தொடர்ந்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடவை இருந்தும் கடமையில் இல்லாததால் குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டு மரணம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY