
posted 13th July 2022
எரிபொருள் வழங்கக் கோரி ஏ - 9 வீதியை மறித்து யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் நேற்று ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காகக் காத்திருந்தவர்களே ஏ - 9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்ததால் அங்கு நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொதுமக்களே வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஏ - 9 வீதி வழியான போக்குவரத்து ஒரு சில மணித்தியாலங்கள் தடைப்பட்டுக் காணப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் மற்றும் போராட்டகாரர்கள் யாழ். மாவட்ட செயலருடன் கலந்துரையாடினர்.
காத்திருப்பவர்களுக்கு எரிபொருள் வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY