எரிபொருளுக்கான  மறியல் போராட்டத்தில் கைதானவர் விடுவிக்கப்பட்டார்

கிளிநொச்சியில் எரிபொருள் கோரி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய செவ்வாய்க்கிழமை (26) நாளுக்கான இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தினடிப்படையில் வரிசையில் காத்திருந்த மக்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது, அந்தப் பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் ஒருவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

இந்த நிலையில், பொதுமக்கள் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைவாக குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்தனர்.

குறித்த மக்களுக்கு தொடர் இலக்கம் வழங்கப்பட்டு, எரிபொருள் வந்ததும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

எரிபொருளுக்கான  மறியல் போராட்டத்தில் கைதானவர் விடுவிக்கப்பட்டார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY