இ. போ. ச. (வவுனியா) ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

உதவி சாலை முகாமையாளர் (பொறியியல்) மாற்ற கோரியும் ஊழியர்களுக்கான பெற்றோலை சீரான முறையில் வழங்கக் கோரியுமே இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றது.

இதனால், இபோ.ச வவுனியா சாலைக்குரிய பேருந்துகள் நேற்று சேவையில் ஈடுபடவில்லை. நேற்று பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்தப் போராட்டத்தால் மாணவர்கள், ஆசிரியர்களும் மற்றும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இ. போ. ச. (வவுனியா) ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)