
posted 19th July 2022
இலங்கை மக்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உறுதியளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வின்போது கருத்துரைத்த அவர், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பறித்தமையே மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் ஊழல் மற்றும் வேரூன்றியிருக்கும் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் ஒன்றை அவர் விடுத்தார்.
எந்தவிதமான வன்முறையிலிருந்தும் விலகி பொது நலனுக்கான உரையாடல் செயல்முறையை ஆரம்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதில் நாட்டின் மதத் தலைவர்களுடன் தானும் இணைவதாக பாப்பரசர் இதன்போது குறிப்பிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)