
posted 27th July 2022
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி மாத்திரைகள் கடத்த இருப்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து க்யூ பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, வேல்ராஜ் மற்றும் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த நாட்டு படகுகளில் சோதனை செய்தனர்.
அப்போது கடற்கரையில் பதிவு எண் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுபடகு ஒன்றை சோதனை செய்த போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 443 அட்டைகளில் 4430 ப்ரீகபலின் 150mg வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து நாட்டுபடகையும் வலி நிவாரண மாத்திரைகளுடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீசார் தப்பி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
க்யூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்த நாட்டுபடகு மற்றும் வலி மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகளடம் ஓப்படைத்தனர்.
தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, புகையிலை, சமையல் மஞ்சள், ஏலக்காய், பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்டவைகள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் தற்போது வலி மாத்திரைகள் கடத்தி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் மீனவர்கள் மற்றும் பாதிகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY