
posted 7th July 2022
தமிழக அரசின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் துணுக்காய பிரதேச செயலகத்துக்குட்பட்ட 572 குடும்பங்களுக்கும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குற்பட்ட 417 குடும்பங்களுக்கும் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு அவை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (04) மாலை பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
அதன் தொடர்ச்சியாக நேற்று துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்களுக்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 989 குடும்பங்களுக்கான தலா 10 கிலோ நிறை கொண்ட அரிசிப் பைகள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டன.
குறித்த நன்கொடை உதவித்திட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 2004 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 572 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 417 குடும்பங்களுக்கும், ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 1023 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 1962 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 521 குடும்பங்களுக்கும் அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)