
posted 11th July 2022
ஒவ்வொரு பகுதிகளிலும் அந்தந்த நகர சபைகளின் கீழ் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி வீதிகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தின் கீழ் வேலை செய்பவர்களின் சேவையைக் கொச்சப்படுத்தக் கூடிய வகையில் அந்த சேவையாளர்களை உதாசீனம் செய்யக் கூடிய சம்பவம் இன்று (11) காலை மன்னார் நகரில் நடைபெற்றது.
வீதிகளைச் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் வாகனங்களை ஓட்டுவதற்கு தேவையான எரிபொருள் கிடைக்காமையினால் கவலை அடைந்து பின்பு விரக்த்தி அடைந்த தொழிலாளர்கள் தங்களால் சேகரிக்கப்பட்ட இந்தக் குப்பைகளை கொண்டு சென்று அகற்றமுடியாமல் மன்னார் செயலகத்திற்கு முன்னால் அவற்றைக் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இதற்கு அந்த வேலையாட்களை அமைதிப்படுத்தி அவர்களுக்கு ஆவன செய்வதைவற்குரிய உயர்பதவியில் உள்ள உத்தியோகத்தர், அவர்களது சேவை அத்தியாவசியச் சேவைகளில் அடங்கவில்லை என்று கூறியதினால் போராட்டம் மீண்டும் உக்கிரமடைந்த நிலையில், தொழிலாளிகளின் கோரிக்கையை அங்கீகரித்து அவரகளுக்கும் எரிபொருள் வழங்க நடபடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதிமொழி கூறியதற்கமைய போரட்டம் அமைதிக்குவந்தது.
இதனை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாமே என்று அப்போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் கூறிக்கொண்டு சென்றமையையும் அவதானிக்க முடிந்தது.