அக்கராஜ மன்னனுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

கிளிநொச்சி அக்ராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள அக்ராயன் மண்ணின் வரலாற்று மன்னன் அக்கராசனுடைய நினைவேந்தல் இன்று ஜூலை 5 காலை பத்து மணிக்கு இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமகிழ்தன் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அக்கராயன் சிற்றரசின் தலைவனை நினைவு கூரும் முகமாக ஒளிச்சுடர் ஏற்றி அரசனின் சிலைக்கு மாலையும் அணுவிக்கப்பட்டது.

13ம் நுற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி பிரதேசம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டு வந்தது அத்தகைய அரசர்களில் ஓருவரே அக்கராஜன்.

அவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்த இப்பிரதேசம் அவரத பெயர் கொண்டே அக்கராஜன் என அழைக்கப்பட்டு வந்தது.குறித்த சிலையினை 05.07.2018 அன்று நாடாளுமன்ற தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது.

அக்கராஜ மன்னனுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY