
posted 19th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்
சமூக சேவைகள் அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் திணைக் களத்தின் ஒழுங்குபடுத்தலில் இன்றைய (19) தினம் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாணம் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு உணவு வழங்கலும் விநியோகமும் தொழில்துறையும், தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் வர்த்தக வணிக அமைச்சினால் குறித்த உதவி வழங்கப்பட்து.
முயற்சி உடையோர் மற்றும் சிறு கைத்தொழில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் முயற்சி உடையவர்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் அமைச்சின் செயலாளர் வாகிசனால் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூநகரி, பல்லவராயன்கட்டு, பளை, தருமங்கேணி, வலைப்பாடு, நாச்சிக்குடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 11 பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு சுமார் 1,50,000 ரூபா பெறுமதியான வாழ்வாதர உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)