
posted 22nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வாக்களிக்க 13 பேருக்கு மறுப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவிகான தேர்தலில் வாக்களிக்க எமது 13 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பினோம் என்று மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 321 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 50 பேரில் 13 பேருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தங்களின் பெயர்கள் வாக்களிக்கும் பட்டியலில் இருந்தபோதும் அவை வெட்டப்பட்டிருந்தன என்று மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட தலைவருக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சாடினார். இதனால், நேற்று பொதுக்கூட்டமும் தேர்தலும் நடைபெற்ற திருகோணமலை நகர சபை மண்டபத்தில் சிறிதுநேரம் குழப்பம் நிலவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)