
posted 31st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வவுனியாவில் வயல் விழா
வவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் வயல் விழா நேற்று (30) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது நெற்செய்கை தொடர்பான புதிய தொழில்நுட்ப முறைகள், பாரம்பரிய முறைகள், நோய்த்தாக்கங்கள் அவற்றினை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், புதிய நடுகை முறைகள் எனப் பல்வேறு விடயங்களை விவசாய போதனாசிரியர்களினாலும், பிரதி விவசாயப் பணிப்பாளரினாலும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக விவசாய பணிப்பாளர் ந. சிவநேசன், பிரதி விவசாய பணிப்பாளர் அற்புதச்சந்திரன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)