
posted 18th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ரவூப் ஹக்கீம் வருகை
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (18) வியாழக்கிழமை காலை, சென்னை மண்ணடியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைமையகத்திற்கு வருகை தந்தபோது அவரை மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் வரவேற்றார். இருநாட்டு அரசியல் நிலைவரங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர். புழல் ஷேக் முஹம்மது அலி, மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா ,தலைமை நிர்வாககுழு உறுப்பினர் சம்சுதீன், திருச்சி ஊடகவியாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் அப்பொழுது உடனிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)