
posted 15th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மேல்மருவத்தூர் சக்தி பீடத்தால் பொங்கல் பொதிகள் அன்பளிப்பு
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு மேல்மருவத்தூர் சக்தி பீடத்தால் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.
நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் , இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சோ. சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் ஆலய அறங்காவற்குழு தலைவரும் வடக்கு மாகாண சபை அவைத்தலைவருமான சீ. வி. கே. சிவஞானம், லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய இணைஸ்தாபகர் கலாநிதி அப்பையா தேவசகாயம், சக்தி பீடம் சக்தி வல்லிபுரம் ரவி, யாழ் லயன்ஸ்கழக முன்னாள் தலைவர் லயன் குமாரசாமி ஜெயந்தன், நல்லூர் வடக்கு சனசமூகநிலைய தலைவர் பூ. லிங்கநாதன்,
விநாயகர் விளையாட்டுக்கழக தலைவர் த. பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு பொதிகளை வழங்கினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)