
posted 20th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
முல்லைத்தீவில் ஒதுங்கிய இந்திய மீனவரின் சடலம்
முல்லைத்தீவில் இந்திய மீனவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த சடலம் கரை ஒதுங்கி உள்ளது.
குறித்த சடலம் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றது.
இதில் உள்ள கொள்கலன்களில் தெலுங்கு மொழியினால் எழுதப்பட்டுள்ளமை இறந்தவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று ஊகிக்கக்கூடியதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கரை ஒதுங்கிய குறித்த சடலம் பற்றி முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சடலத்தை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்து, பரிசோதனையின் பின் சடலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)