
posted 18th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மர்மப் பொதிக்குள் துப்பாக்கி ரவைகள்
புதுக்குடியிருப்பில் மர்மமான இருந்த பொதி ஒன்றினை புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்று (18) மீட்டனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைத்தீவு காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை யாரோ விட்டுச்சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹேரத் தலைமையிலான பொலிஸார் விரைந்து சென்று குறித்த பொதியினை மீட்டுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட பொதியினுள் 37 துப்பாக்கி ரவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பொதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் மர்ம பொதியினை விட்டுச்சென்ற நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கபெறாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)