
posted 18th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம்
பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (17) புதன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
நேற்று மதியம் 12 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இந்த நினைவு தினம் இடம்பெற்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவு தினத்தில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மா. இளம்பிறையன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற பொங்குதமிழில் தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)