
posted 29th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பெட்டகம் ஆவண சேகரிப்பு மையம் குப்பிளானில் திறந்துவைப்பு
யாழ்ப்பணம் குப்பிளானில் ஆவண சேகரிப்பு நிலையம் ஒன்று சனிக்கிழமை (27) சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினாரல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொருளியல் ஆய்வாளர் செல்வின் இரானியேல் தலமையில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக பெட்டகம் ஆவண சேகரிப்பு மையத்தை சம்பிர்தாய பூர்வமாக வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம், யாழ்ப்பாண பல்கலைக் கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர் சி.அ. யோதிலிங்கம், பொருளியல் ஆய்வாளர் செல்வில் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர். அதனைத் தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து பெயர்பலகையினை கலைத்துறை பீடாதிபதி எஸ். ரகுராம், வணக்கத்திற்க்குரிய வேலன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து திரை நீக்கம் செய்துவைத்தனர். தொடர்ந்து பெட்டகம் ஆணவ சேகரிப்பு நிலையத்தில் மரங்கள் நாட்டப்பட்டன.
மரங்களை கலைத்துறை பீடாதிபதி எஸ். ரகுராம், வணக்கத்திற்க்குரிய வேலன் சுவாமிகள், குப்பிளான் பிரதேசத்தை சேர்ந்த பெண்மணி ஒருவரும் நாட்டிவைத்தனர்.
தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றதுடன் ஆசி உரையினை சிவகுரு ஆதீன முதல்வர் வணக்கத்திற்க்குரிய வேலன் சுவாமிகள் நிகழ்த்தினார்.
தலமை உரையினை நிகழ்வின் தலைவரும் பொருளியல் ஆய்வாளருமான செல்வின் நிகழ்த்தினரார். கருத்துரைகளை சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநரும், சட்டத்தரணியும், யாழ்ப்பாண பல்கலைக்கழக வருகை விரிவுரையாளருமான அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், நிகழ்வின் பிரதம விருந்தினரும் யாழ் பல்கலைக் கழக கலைத்துறை பீடாதிபதியுமான பேராசிரியர் ஏஸ். ரகுராம், யாழ் பல்கலைக் கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன், சிரேஸ்ர விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணா, சைவ சித்தாந்த துறை சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி தி. செல்வமனோகரன், கலாநிதி சிதம்பரநாதன், ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் சோ. பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் சமூக விஞ்ஞான ஆய்வுமைய செயற்பாட்டாளர்கள், கிராம மக்கள், யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்ல தலைவர் சி. தில்லைநாதன், கரலற்றோரின் குரல் அமைப்பு நிறுவுனர் கோமகன், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக விரிவுரையாளர் நமது உழைப்பு நிறுவுனர் தனபாலசிங்கம், உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)