
posted 1st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
புத்தூரில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு
புத்தூர் கிழக்கில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றுமுன்தினம் (30) சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் குறித்த வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)