
posted 27th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில், சுதந்திரபுரம் பகுதியில் நேற்று முன் தினம் (25) வியாழன் இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுதந்திரபுரம், வாகீசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டா வாகனமும் மோதி விபத்திற்குள்ளாகின.
இந்த விபத்தில் பட்டா வாகனத்தை செலுத்தி வந்த வள்ளிபுனத்தை சேர்ந்த க.நவீன் (வயது - 28) என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.
நெல் வெட்டும் இயந்திரத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், போதிய பாதுகாப்பில்லாமல் பயணித்தமை தெரிய வந்தது. உழவு இயந்திரத்தின் அளவை விட நெல் வெட்டும் இயந்திரத்தின் பாகங்கள் பெரிதாக இருந்தன. உழவு இயந்திரத்தின் முன்பக்க மின்குமிழ் ஒன்று செயலிழந்திருந்துள்ளது. இதனால் எதிரே வருபவர்களுக்கு உழவு இயந்திரத்தின் பின்னால் ஏற்றப்பட்ட நெல் வெட்டும் இயந்திரத்தின் அளவு தெரிய வாய்ப்பில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
உழவு இயந்திர சாரதி புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)