
posted 26th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பாரம்பரிய முறைப்படி தைப்பூசத் தினத்தில் நெற்புதிர் வழங்கும் வைபவம்
தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுத்கும் சம்பரதாய நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை (25) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சங்குவேலி வயலில் விளைந்திருந்த நெற்கதிகதிர்களை அப்பிரதேச விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று சூரியனுக்கு வணக்கம் தெரிவித்து நெல்லினை அறுவடை செய்தனர்.
அவற்றினை தலையில் சுமந்துசென்று மாட்டுவண்டியில் ஏற்றி பாரம்பரிய முறைப்படி உடுவில், மருனார்மடம் ஊடாக இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)