பலவகைச் செய்தித் துணுக்குகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பலவகைச் செய்தித் துணுக்குகள்

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று (09) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு வருகை தந்ததுடன் பொது நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனுடன் விரிவாக கலந்துரையாடினர்.

இதில் யாழ்ப்பாணம் பொது நூலகர் அனுசுயா சிவகுமார், தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சைவர்களின் மனதை புண்படுத்தும் சதி முயற்சி குறித்து டக்ளஸ் காட்டம்

(எஸ் தில்லைநாதன்)

சைவர்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்பட மொன்றில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று திங்கள் (08) மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ்,

‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்களத் திரைப்படமே இவ்வாறு திரிபுபடுத்தி திரையிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்ல, முருகப்பெருமானுக்கு நெற்றிப்பொட்டுக்கு பதிலாக நாமம் இடப்பட்டுள்ளதாகவும், முருகனின் வேலாயுதத்துக்கு பதிலாக சூலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கியுள்ளார்.

எனவே, சைவர்களின் வரலாறை திரிபுபடுத்தும் இந்தத் திரைப்படம் தொடர்பான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறையிடுமாறும், நீதிமன்றம் செல்லுமாறும் ஜனாதிபதி ரணில் இங்கு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் அறிக்கையொன்றை தருமாறும் கலாசார அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

மழை வீழ்ச்சி 11ஆம் திகதிவரை அதிகரிக்க வாய்ப்பு - பிரதீபராஜா

(எஸ். தில்லைநாதன்)

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 11.01.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை வரை மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கத் தொடங்கியுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள ஆபத்து தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

2023/2024 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வடகீழ் பருவத்தின் இறுதிச் சுற்று மழை இதனோடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஜனவரி இறுதிவரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்க கூடும்.

தற்போதைய மழை குறைவடைந்ததும் பனி தொடங்கும் என்பதனால் சற்று குளிரான வானிலை தொடரக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்

(எஸ் தில்லைநாதன்)

பருத்தித்துறை அரசினர்ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 நாட்களில் மட்டும் 93 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இவ்வைத்தியசாலையில் ஜனவரி 01 ஆம் திகதி முதல் கடந்த 8 ஆம் திகதி பிற்பகல் வரை 93 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை 61 ஆக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் ஏனைய நோய் பாதிப்புகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் பாரிய நெருக்கடி நிலவிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக ஊழியர் உட்பட இருவர் கைது

(எஸ்தில்லைநாதன்)

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் நகரில. பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிரபல மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை நேற்று (08) திங்கள் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் ஆயிரத்து 100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என விசாரணையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் மேலும் இரண்டு பெட்டிகளில் சுமார் 250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மீதும் மருந்தகம் மீதும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)