
posted 24th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நயினை அம்மனுக்கு கும்பாபிஷேகம்
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (24) புதன்கிழமை நடைபெற்றது. காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோபுரங்களுக்கு கலசம் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, நேற்றும் நேற்று முன்தினமும் எண்ணெய் காப்பு சாத்துதல் நடைபெற்றது.
இன்றைய தினம் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு சிவசிறீ ப. மு. பாலகுமார குருக்கள் பிரதம சிவாச்சார்யராக இருந்து கிரியைகளை நடத்தி வைத்தார். அவருடன், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சிவாச்சாரியர்கள் பங்கேற்றனர்.
அத்துடன், இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்க புலம்பெயர் நாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் வருகை தந்துனர். பக்தர்களின் வசதி கருதி போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)