
posted 7th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தொடர்ச்சியாக கரையொதுங்கும் சந்தேகத்திற்குரிய பொருட்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று சனிக் கிழமையன்று (06) அதிகாலையில் கரையொதுங்கியுள்ளது.
படகில் காணப்படும் மீன்பிடி திணைக்களத்தின் பதிவு இலக்கம் அழிக்கப்பட்டுக்காணப்படுவதால் குறித்த படகை போதை பொருள் கடத்தல்காரர்கள் பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலீஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவளை வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியது. அதேவேளை நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)