
posted 27th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேர்தலையே றிவேசாக்கும் அநுரகுமார
நாட்டின் புதிய ஜனாதிபதியாக எதிர்காலத்தில் அநுர குமார திஸநாயக்க வருவார் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்த பின்னிற்கின்றது என தேசிய தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயல்குழு உறுப்பினருமாகிய கே. டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் ஏற்பாட்டில் இடம்பெறும் 2024ஆம் ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட மீனவர் மாநாடு சாய்ந்தமருதில் நடந்தது.
அங்கு பேசிய அவர், “மீனவர் சமூகம் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் அவர்கள் வறுமைக் கோட்டிற்குக கீழ் உள்ளவர்கள். விவசாய சமூகத்தை பார்த்தாலும் தமிழராக இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் அவர்களும் அதே நிலையில்தான் சீவிக்கின்றனர். அரச ஊழியர்களை எடுத்துக் கொண்டால், அநேகமானோர் இன்றைய நாளிலே மட்டுமல்லாமல் ஒருநாள் சாப்பிடுவதற்குக் கூடக் கஷ்டப்படுகின்ற இனமாக இருக்கின்றது.
இந்த இடத்தில எனக்கு விளங்குகின்றது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கடமை செய்கின்றார்கள்; அவர்களும் அதே தரத்தில்தான் ஜீவிக்கின்றார்கள். ஆகவே, இந்த நாட்டிலே வேலை செய்கின்ற சமூகம் கடந்த 76 வருடங்களாக வறுமைக்கோட்டின் கீழேதான் வைக்கப்பட்டிருகின்றது. ஆகவேதான் இந்த அன்றாடும் கஷ்டப்படும் சமூகத்திற்கு உண்ண உணவு கொடுத்து, உடுத்த உடைகொடுத்து அவர்களது தேவைகளை ஒரளவிற்காகவது நிறைவேற்றிக்கொள்வதற்காக இப்போது எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. அதற்காக எங்களுக்கு பல்வேறுபட்ட வேலைகள் காணப்பட்டிருக்கின்றன.
ஆகவேதான், இன்று இந்த மீனவ சமூகம் மீனவர்களையும், மீனவ சமூகம் அனைத்தையும் உருவாக்கி ஒரு குடையின் கீழ் கொண்டுவரக்கூடிய வேலை எங்களுக்கு கடமையாக இருக்கின்றது. அகில இலங்கை பொது மீனவ சம்மேளனமாக இருக்கின்ற எங்களின் மீனவ சம்மேளனம்தான் எந்த ஆட்சி செய்தாலும், அந்த ஆட்சி செய்கின்ற அநீதிக்கு எதிராக எங்களினுடைய கோரிக்கைகளை வென்றெடுக்கும் சக்தி வாய்ந்ததாகும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)