
posted 22nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேசியத்தின் இருப்புக்காக பொறுப்புடன் செயல்படுவோம்
என்னுடன் போட்டியிட்ட எம். ஏ. சுமந்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து எமது மக்களின் உரிமைக்காக, தேசிய இருப்புக்காக, தேசியத்தின் ஒவ்வோர் அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும், கடமை உணர்வுடனும் செயல்படுவோம். இவ்வாறு இலங்கை தமிரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக்கான தேர்தல் நேற்று (21) திருகோணமலையில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும், எனக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அயராது உழைத்த அந்த பொதுச்சபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தலைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.
இன்று இது பல பேருக்கு பல நம்பிக்கைகளை தந்திருக்கின்றது. பல இளைஞர், யுவதிகள் கட்சி பற்றிய அதிகமான அக்கறை கொள்ள வைத்துள்ளது. என்னுடன் போட்டியிட்ட நண்பர் எம். சுமந்திரன், சீ. யோகேஸ்வரன் ஜயாவும் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக, தேசிய இருப்புக்காக, தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து எங்களுடைய பொறுப்போடும், கடமையுடனும் செயல்படுவோம். அந்தக் கடமையை சரியாக செய்வோம். இதற்காக பல தடவை பல ஊடகங்கள் ஊடாக எங்களுடைய ஒற்றுமையையும், பலத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம்
நண்பர் சுமந்திரன்கூட பல தடவை தெளிவாகப் பல இடங்களில் சொல்லியிருந்தார். ஆகவே, எங்களுடைய பங்கு என்பது இனம் சார்ந்தது. தமிழ் தேசியத்தின் இருப்பு சார்ந்தது. எங்களுடைய இனத்துக்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் எல்லோரும் எங்கள் கடமைகளை ஒன்றாக பலப்படுத்துவோம் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)