
posted 14th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தரும் முக்கிய அறிவித்தல்
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக குடிநீர் குழாய்கள் தெங்கு நிலையில் உள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
அக்கறைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை முகாமையாளர் மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கான இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இதன்படி கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கட்டுக்கடங்காத வெள்ளநீர் பாய்ந்தோடி வருகின்றன.
இதன் காரணமாக நிந்தவூர், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களுக்கு குடிநீரினை கொண்டு வரும் பிரதான நீர் விநியோக குழாய் மல்லிகைத் தீவு கொல்லவெளி சந்தி, இ சி ஜி பாலத்தடி போன்ற 06 இடங்களில் பாய்ந்தோடும் வெள்ள நீருக்கு கீழால் தொங்கு நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில் உயர் அழுத்தத்தில் நீரை விநியோகிக்கும் போதும் மற்றும் நீர் மட்டம் அதிகரிக்கும் பட்சத்திலும் மேற்படி இடங்களிலுள்ள குழாயானது உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் தற்போது குறைந்த அழுத்தத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே தங்களது பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே நீர்ப்பாவனையாளர்கள் முன்கூட்டியே தமக்கு தேவையான நீரினை சேமித்து விரையமின்றி பாவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)