
posted 20th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தென்கிழக்கு பல்கலைக்கழக திறப்பதில் தாமதம்
வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக சுத்திகரிப்பு பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகிற சூழ்நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்வதால் மாணவர்கள் நலன் கருதி இந்த வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 22.01.2024ஆம் திகதி திங்கள் தொடக்கம் Zoom (நிகழ்நிலை) மூலமாக நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அறிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்படுவதுடன் மறுசீரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழல் மாணவர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புகளையும், அசௌகரியங்களையும் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை, சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக திறப்பதில் தாமதம்