
posted 22nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார், மாந்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாந்தை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு 08 சமூக சேவைகள் அமைப்புகளுக்கான பொருட்களை கையளித்தார்.
இந்நிகழ்வில், மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர், உதவிச்செயலாளர், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், மாந்தை பிரதேச சபையின் முன்னாள் உதவித்தவிசாளர் தெளபீக், முன்னாள் உறுப்பினர்களான பிரசித்தா, நைஸர், விஜயபாண்டி, பெருமால், ராசையா, இணைப்பாளர் முனவ்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)