
posted 20th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சீனாவில் காலநிலை மாற்ற செயலமர்வில் பங்கேற்பு
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள ஷென்சென் உயர் தொழில்நுட்ப நிறுவகத்தில் நடைபெறும் "காலநிலை மாற்றத்திற்கான நீர் மேலாண்மை" குளிர்கால செயலமர்வில் பங்கேற்றுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் துறையைச் சேர்ந்த இஷ்கி, விதுசன், ஹேம பிரபா மற்றும் கவுசல்யா ஆகியோர் உள்ளிட்ட 6 நாடுகளில் உள்ள 11 பல்கலைக்கழகங்களில் இருந்து 40 பட்டதாரி மாணவர்கள் இச் செயலமர்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலமர்வு ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.
நோர்வே, போலந்து, ஜேர்மனி, இலங்கை, மங்கோலியா மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகளில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களில் பேட்னர் நிறுவனமாக, இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், 2011ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
புதிய புதுமையான டிஜிற்றல் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையில் நிலையான மற்றும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதில் கற்கவும், பகிர்ந்து கொள்ளவும், மாற்றத்தை ஏற்படுத்தவும், இந்த குளிர்கால செயலமர்வானது சர்வதேச அரங்கில் ஒரு வாய்ப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)