
posted 22nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சிறுவனது ஊஞ்சல் அவனுக்கே எமனானது
ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை கயிறு இறுக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு - செம்மலையில் சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது. இதில், செம்மலை கிழக்கை சேர்ந்த பிரசாத் டனிஸ் (வயது 10) என்ற சிறுவனே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
சிறுவன் வீட்டிலிருந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தபோது கயிறு கழுத்தை இறுக்கியுள்ளது. இதனை அவதானித்த அவரின் உறவினர்கள் சிறுவனை மீட்டு முல்லைத்தீவு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று சிறுவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)