சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை வருடாந்தம் உலகளாவிய ரீதியில் நடத்தி வரும் 9ஆவது பூப்பந்தாட்ட தொடர் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜூலை 31 - ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக உள்ளக அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பான ஊடக சந்திப்பு உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் நிறுவுநர் தலைவர் கந்தையாசிங்கம் தலைமையில் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போது, “ஓர் அமைப்பு என்பது கலாச்சாரம் மற்றும் தலைமுறைகளை இணைப்பது மற்றும் ஒன்றாக பிணைக்கப்படும்போது குடும்பமாக மாறும் நண்பர்களின் குழுவை உருவாக்குகிறது. தமிழ்ச் சமூகம் உலகெங்கிலும் இணையவும், இணைந்திருக்கவும் விரிவுபடுத்தவும் இது ஒரு சிறந்த வழியாக அமைகிறது.

மிக முக்கியமாக, நமது இளைஞர்கள் சுறுசுறுப்பாகவும், அவர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பற்றி அறிந்து கொள்வதில் ஈடுபாடு காட்டுவதும் ஆகும். பூப்பந்து விளையாட்டு இளைஞர்கள், பெரியவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை ஊக்குவிக்கிறது.

“பூப்பந்து (இறகுப்பந்து) என்பது வயது வித்தியாசமின்றி அனைவரும் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு, மேலும் மூன்று தலைமுறை மக்களை ஒன்றிணைக்கிறது. உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை, உலகம் முழுவதிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கும், ஒற்றுமையை ஏற்படுவதற்கும் ஒரு பாலமாகவும் இந்தத் தளம் வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)