
posted 5th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கொவிட் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள்
யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் கொவிட் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் நேற்று (04) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயினால் ஒருவர் இறந்துள்ளார். எனவே யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதேபோல இந்த காலப்பகுதியில் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவது சாலச் சிறந்தது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)