
posted 9th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கில் வெள்ள அபாயம்
கிழக்கு மாகாணத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பொது மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகி வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை காரணமாக பல வேறு பிரதேசங்களிலும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் தாழ்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பல குடும்பங்கள் வீடுகளை விட்டும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் அகதிகளாகவும் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை அம்பாறை மாட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்த வண்ணம் இருப்பதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தின் முக்கிய சமுத்திரமான சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதனால் இரண்டாவது தடவையாகவும் நேற்று (08) நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மேலதிக நீரை கடலுக்கு வெளியேற்றும் களியோடை ஆறு உட்பட மேலும் சில பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் அயல் பகுதிகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. மழை தொடர்ந்த வண்ணமே இருப்பதனால் மக்கள் அன்றாட தொழில்களை மேற்கொள்ள முடியாமலும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் திண்டாட்ட நிலைக்கு உட்பட்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)