
posted 15th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிளிநொச்சி வாய்க்காலில் இளைஞர்கள் இருவர் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சி - கோவிந்தன் கடை சந்தியில் வாய்க்காலில் இருந்து இளைஞர்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். விபத்தால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
நேற்று முன்தினம் (13) சனி நள்ளிரவு வேளை இந்த விபத்து இடம்பெற்றதாக நம்பப்படுகின்றது. வீதியிலிருந்த வீதி சமிக்ஞை குறியீடுகளை உடைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், கல்மடுவை சேர்ந்த தயாளன் தனுசன் (வயது 20), அழகாபுரியை சேர்ந்த கிருஷ்ணன் சதீசன் (வயது 18) ஆகிய இருவரே உயிரிழந்தனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)