களஞ்சியசாலை தீ விபத்தில் இருவர் பலி

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

களஞ்சியசாலை தீ விபத்தில் இருவர் பலி

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று (02) அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதானவரும், அவரது சகோதரருமான வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீவிபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு பருத்தித்துறை நீதவான், யாழ் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். இதேவேளை தடயவியல் பொலீஸாரும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலங்கள் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

களஞ்சியசாலை தீ விபத்தில் இருவர் பலி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)