கல்முனை மாநகர வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனை மாநகர வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை

கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களாக கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கே. குணரட்னம் மற்றும் எம். சலீம் ஆகியோருக்கும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் வருமான பரிசோதகர் எம்.ரி. சப்னம் சாஜிதாவுக்குமான பிரியாவிடை நிகழ்வு மாநகர சபையின் நிதிப் பிரிவினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மாநகர சபையின் கணக்காளர் கே.எம். றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம அத்தியாக கலந்து கொண்டிருந்ததுடன், பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி ஆகியோர் உட்பட நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த உத்தியோகத்தர்கள் மூவரும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். கல்முனை மாநகர சபையில் இவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளைப் பாராட்டி உரையாற்றிய ஆணையாளர், மாநகர சமூகத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.

இந்நிகழ்வை நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களின் சார்பில் வருமானப் பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் ஒருங்கிணைப்பு செய்து நெறிப்படுத்தியிருந்தார்.

கல்முனை மாநகர வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)